டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் வருவாய் இழப்பு – தமிழக அரசு

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிட வேண்டியதில்லை என்றும் தமிழக அரசு மனுவில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு மேல்முறையீடு மனுவில் தகவல் கூறப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 45 நாட்களுக்கு பிறகு மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் ஏராளமானோர் குவிந்தனர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. டாஸ்மாக் திறப்புக்கு மறுநாள் நிலைமை சீர்செய்யப்பட்டுவிட்டதாக மேல்முறையீடு அரசு மனுவில் தகவல்.

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிட வேண்டியதில்லை என்றும் தமிழக அரசு மனுவில் கூறப்பட்டுள்ளது. இதனிடையே இந்தியாவில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த மே 17-ம் தேதி வரை ஊரடங்கு  நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், மத்திய அரசு, சில தளர்வுகளையும் அறிவித்தது. இதைத்தொடந்து பல மாநிலங்களில் மூடப்பட்ட மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. அதன்படி, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியது.

இதையடுத்து டாஸ்மாக் கடைகள் திறந்த இரண்டு நாட்களில் ரூ.295 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக மதுபான கழகம் தெரிவித்தது. மதுபான கடைகளை திறந்ததும் மதுபிரியர்கள் கூட்டம் குவிந்தது. இதனால் தனிமனித இடைவெளி மற்றும் சமூக விலகல் கேள்விக்குறியானது. இதனை கருத்தில் கொண்டு உயர்நீதிமன்றம் உத்தரவுகளை கடைபிக்கவில்லை என கூறி மதுக்கடைகளை மே 17 ஆம் தேதி வரை திறக்க கூடாது என்றும் ஆன்லைனில் விற்பனை செய்யலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் உயர் நீதிமன்றம் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

அதில், கொரோனா தொற்று தடுக்கும் வகையில், தனிமனித இடைவெளி கடைபிடித்தே மதுபானங்கள் விற்பனை நடைபெற்றது என்றும் மதுக்கடைகளை திறப்பது அரசின் கொள்கை முடிவு அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற உயர்நீதிமன்றம் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்