அந்த தப்ப மட்டும் பண்ணவே கூடாது! தலைவர் 171 படத்திற்காக லோகேஷ் எடுத்த முடிவு?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்தை வைத்து இயக்கவுள்ள ‘தலைவர் 171’ படத்திற்கான வேளைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த திரைப்படத்தினை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். படத்தில் சண்டை இயக்குனர்களாக இரட்டையர்கள் அன்பறிவு பணியாற்றி வருகிறார்கள்.

ரஜினிகாந்த் தற்போது தன்னுடைய 170-வது படமான தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள தன்னுடைய 171 -வது படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது. இதற்கிடையில், ‘தலைவர் 171’ படம் குறித்த தகவலும் இணையத்தில் உலாவி கொண்டு வருகிறது.

அந்த வகையில், தற்போது தலைவர் 171 படத்திற்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அதிரடியான முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால், இதற்கு முன்பு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ பட சமயத்தில் படம் lcu-வில் வருவதாகவும் படத்தில் இவர்கள் எல்லாம் நடிக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகி கொண்டு இருந்தது.

பலே கில்லாடி லோகேஷ் நீங்க…’தலைவர் 171′ திரைப்படத்தில் வில்லன் யார் தெரியுமா?

இந்த நிலையில், தலைவர் 171 படத்தில் இந்த கேள்விகள் வரவே கூடாது. ஒரு வேலை இதற்கு முன்பு தன்னுடைய படங்களில் நடித்த பிரபலங்கள் இந்த படத்தில் நடித்தால் இந்த படமும் LCU என்று குழப்பத்தில் வந்து ஏமாற்றம் அடைந்துவிடுவார்கள் என்பதற்காக இதற்கு முன்பு தன்னுடைய படங்களில் நடித்த எந்த பிரபலங்களையும், தலைவர் 171 படத்தில் நடிக்க லோகேஷ் அழைக்கவில்லையாம்.

முழுக்க முழுக்க இதுவரை தன்னுடைய இயக்கத்தில் நடிக்காத பிரபலங்கள் மட்டும் தான் இந்த தலைவர் 171 படத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டு இருக்கிறாராம். இந்த படத்தில் வில்லன் மற்றும் முக்கியமான கதாபாத்திரம் என எந்த கதாபாத்திரமாக இருந்தாலும், தன்னுடைய பழைய படங்களில் நடித்த எந்த பிரபலங்களையும் இந்த தலைவர் 171 படத்திற்குள் கொண்டு வரவேண்டாம் என்ற முடிவை லோகேஷ் எடுத்துள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.  மேலும், தலைவர் 171 படத்தில் ராகவலரன்ஸ், சிவகார்த்திகேயன், ஜீவன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.