விரைவில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு – அலுவலர்களை நியமிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு!

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த அலுவலர்களை நியமனம் செய்ய மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கில், வரும் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்குமாறு தமிழக மாநில தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டியிருந்தது. இதனைத்தொடர்ந்து புதிதாக அமைக்கப்பட்ட மாவட்டங்களில் தேர்தலை நடத்தி முடிக்க தமிழக அரசும், மாநில தேர்தல் ஆணையமும் தீவிரமாக செயல்பட்டு, ஆலோசனைகள் மேற்கொண்டனர்.

இந்த நிலையில், தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமிக்க தற்போது மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமனம் செய்திட மாவட்ட தேர்தல் அலுவலர்கள், ஆட்சியர்களுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி ஆகிய 9 மாவட்டங்களில் தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்