முகப்பருக்களை நீக்க முக்கியமான சில இயற்கை வழிமுறைகள் அறியலாம் வாருங்கள்…!

சில சமயங்களில் நமது முகத்தில் வரக்கூடிய பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் முக அழகை கெடுத்து விடுகிறது. இதனை மறைப்பதற்கு என்ன செய்வதென்று தெரியாமல் செயற்கையான க்ரீம்களை வாங்கி உபயோகிப்பது நிவாரணம் கொடுத்தாலும், அது நமது சருமத்தை சேதப்படுத்தும். எனவே சருமத்திற்கு எவ்வித சேதமுமின்றி விரைவில் முகப்பரு குணமாக இயற்கை வழிமுறைகள் சிலவற்றை இன்று நாம் தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்.

கற்றாழை ஜெல்

Aloe Vera Gel

நன்மைகள் : கற்றாழை ஜெல்லில் உள்ள குளிர்ச்சி தன்மை காரணமாக சருமத்தில் வறட்சி நீங்கி சருமத்திற்கு இயற்கையான ஈரப்பதம் கிடைக்க உதவுகிறது.

உபயோகிக்கும் முறை : இரவு தூங்குவதற்கு முன்பு கற்றாழையில் உள்ள ஜெல்லை எடுத்து அதனுடன் வைட்டமின் ஈ மாத்திரை கலந்து முகத்தில் தடவி விட்டு தூங்க வேண்டும்.

தேங்காய் எண்ணெய்

oil

நன்மைகள் : தேங்காய் எண்ணெய் பருக்கள் உள்ள இடத்தில் தடவி வந்தால் பருக்களை நீக்க உதவுகிறது. முகத்திற்கு பளபளப்பை கொடுக்கவும் உதவுகிறது.

உபயோகிக்கும் முறை : தேங்காய் எண்ணெயில் இரண்டு முதல் மூன்று சொட்டு எடுத்துக் கொண்டு இதனை பருக்கள் உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். அதன் பின்னர் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவிவிட வேண்டும்.

ஐஸ்

நன்மைகள் : பருக்களின் வீக்கம் மற்றும் எரிச்சலை குறைப்பதற்கு இந்த ஐஸ் மிகவும் உதவுகிறது. மேலும் இது நமது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து முகப்பருக்கள் நீங்க உதவி செய்கிறது.

உபயோகிக்கும் முறை : இரவு தூங்குவதற்கு முன்பும் காலையில் எழுந்து சிறிது நேரம் கழித்த பின்னரும் முகத்தில் ஒரு துணியில் ஐஸை வைத்து ஒத்தடம் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்யும்பொழுது நமது முகத்தில் ரத்த ஓட்டம் அதிகரித்து பருக்கள் நீங்க உதவுகிறது.

க்ரீன் டீ

நன்மைகள் : இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிக அளவில் காணப்படுகிறது. இது முகப்பரு, முக வீக்கம் ஆகியவற்றை நீக்குவதற்கு உதவுகிறது.

உபயோகிக்கும் முறை : க்ரீன் டீயை குளிர்சாதன பெட்டியில் வைத்து நன்றாக குளிர வைத்துவிட்டு, இதனை முகத்தில் பரு உள்ள இடங்களில் சிறிது நேரம் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு செய்யும் பொழுது விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

தேன்

 

நன்மைகள் : முகத்தில் உள்ள பாக்டீரியாக்களை நீக்குவதற்கு தேன் பெரிதும் உதவுகிறது. அதில் அதிகளவு பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் காணப்படுகிறது.

உபயோகிக்கும் முறை : இரவு தூங்குவதற்கு முன்பாக தேனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் கிரீம் போல பூசி விட்டு தூங்க வேண்டும். காலையில் எழுந்ததும் முகத்தை சுத்தம் செய்துவிட வேண்டும்.

ஆப்பிள் சீடர் வினிகர்

நன்மைகள் : நமது முகத்தில் காணப்படக்கூடிய முகப்பருவை உருவாக்குவதற்கான பாக்டீரியாவை அழித்து நமது சருமத்தின் நிறத்தை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது.

உபயோகிக்கும் முறை : இந்த ஆப்பிள் சீடர் வினிகரை தண்ணீரில் கலந்து முகத்தில் தடவ வேண்டும். 10 நிமிடத்திற்குப் பிறகு முகத்தை கழுவி விட வேண்டும்.

பூண்டு

 

நன்மைகள்: பூண்டு பாக்டீரியா எதிர்ப்பு, அண்டிசெப்டிக் மற்றும் ஆக்சிஜனேற்ற பண்புகளை அதிகளவு கொண்டுள்ளது. எனவே இது முகப்பருக்களை நீக்குவதற்கு பெரிதும் உதவுகிறது.

உபயோகிக்கும் முறை : பூண்டை அரைத்து பருக்கள் உள்ள இடத்தில் தடவ வேண்டும். அதன் பின்பு 5 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி விட வேண்டும்.

author avatar
Rebekal