மனிதம் போற்றுவோம், மாற்றுத்திறனாளிகளைக் கொண்டாடுவோம் – டிடிவி

இன்று சர்வதேச மாற்று திறனாளிகள் தினம் அனுசரிக்கப்படும் நிலையில் டிடிவி தினகரன் வாழ்த்து. 

இன்று சர்வதேச மாற்று திறனாளிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து டிடிவி தினகரன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நாளில் கடவுளின் குழந்தைகளான அவர்களுக்கு இதயம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். விடாமுயற்சிகளால் தங்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையையே மாற்றும் சக்தி படைத்த மாற்றுத்திறனாளிகளை மதித்து நடத்திடுவோம்.

உலகம் திரும்பிப்பார்க்கும் வகையில் அவர்கள் சாதனைகள் புரிந்திட ஒவ்வொருவரும் உறுதுணையாக இருந்திடுவோம். மாற்றுத்திறனாளிகளின் வாழ்வியல் சூழலுக்கு ஏற்ற வகையில் நம்முடைய சமூக கட்டமைப்பை உருவாக்குவதற்கு இந்தநாளில் உறுதியேற்றிடுவோம். மனிதம் போற்றுவோம், மாற்றுத்திறனாளிகளைக் கொண்டாடுவோம்.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.