#Breaking:தமிழகத்தை நோக்கி…டிச.2 வது வாரத்தில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி!

#Breaking:தமிழகத்தை நோக்கி…டிச.2 வது வாரத்தில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி!

டிச.2 வது வாரத்தில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் தற்போது நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாற வாய்ப்பு உள்ளதாகவும்,அடுத்த 12 மணி நேரத்தில் அது ஜாவத் புயலாக வலுப்பெறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும்,இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு – ஆந்திரா, ஒடிசா கரையை 4-ஆம் தேதி காலை நெருங்க கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,அந்தமான் அருகே வங்கக்கடலில் டிச.2 வது வாரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது தமிழகம் நோக்கி நகரும் என்றும்,இது மேலும் வலுவடையாது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Join our channel google news Youtube