சிறுத்தை தாக்கி பலி – ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவிப்பு..!

நீலகிரியில் உள்ள  பந்தலூர் அருகில் கடந்த மாதம் தேயிலைத் தோட்டத்தில் நடந்து சென்ற மூன்று பெண்களை சிறுத்தை தாக்கியது‌. இதில் படுகாயமடைந்த ஒரு பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதே பகுதியில் சில தினங்களுக்கு முன் ஒரு சிறுமியை சிறுத்தை தாக்கியது. அதில் சிறுமி காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் சிறுத்தையை பிடிக்க வலியுறுத்தி வந்தனர்.

இதற்கிடையில் நேற்று வடமாநில பெண் தொழிலாளி ஒருவர் தனது 3 வயது மகளை வீட்டிற்கு அழைத்துச் சென்ற போது பதுங்கியிருந்த சிறுத்தை திடீரென சிறுமியை தாக்கியது. படுகாயம் அடைந்த சிறுமையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், சிறுமி மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

இன்று 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 14 மாவட்டங்களில் கனமழை..!

இன்று வனத்துறையினர் அந்த சிறுத்தை பிடிப்பதற்கு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வந்த நிலையில் சற்று நேரத்திற்கு முன்பு அந்த சிறுத்தைக்கு முதல் மைக்க ஊசி செலுத்தப்பட்டிருந்தது.  இந்நிலையில், நீலகிரியில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த இரண்டு பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.

ஏலமன்னா கிராமத்தை சேர்ந்த சரிதா (29) ஜார்கண்டை சார்ந்த சிறுமி நான்சி (3) ஆகிய இருவரையும் சிறுத்தை தாக்கி உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் நிவாரணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் இருவரும் சிறுத்தை தாக்கி உயிரிழந்த துயரமான செய்தியை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். விலைமதிப்பில்லா இந்த இரு உயிரிழப்புகளை சந்தித்துள்ள குடும்பத்தினர், உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார்.

அதேபோல நீலகிரியில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த இரண்டு பேரின் குடும்பங்களுக்கு வனத்துறை சார்பில் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
murugan