Leap year 2024: ‘லீப்’ தினத்தை முன்னிட்டு சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்.!

Leap year 2024: நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறையே பிப்ரவரி மாதத்தில் 29 நாள்கள் வரும், இதை லீப் வருடம் என்பார்கள். அதாவது நான்காண்டுகளுக்கு ஒருமுறை பிப்ரவரி மாதத்தில் 29 நாட்கள் வரும், அது இந்த ஆண்டு 2024-ல் வந்திருக்கிறது.

READ MORE – வந்தாச்சு புது அப்டேட்.. இனி பழைய வாட்ஸ்அப் மெசேஜை ஒரு நொடியில் பார்க்கலாம்…!

இதை கொண்டாடும் விதமாக கூகுள் சிறப்பான டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த டூடுலில் 29 என்ற எண் குறிக்கப்பட்ட ஒரு தவளை ஒரு குளம் போல் தோன்றும் ஒரு இலையில் பக்கத்திலிருந்து மற்றொரு பக்கத்திற்கு குதிக்கும் படையும் அனிமேஷன் செய்யப்பட்டு இருக்கிறது. கூகுள் இதற்கு முன்பு பிப்ரவரி 2020-ல் லீப் டே டூடுலைப் பகிர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Leap Day 2024
Leap Day 2024 File Image

READ MORE – மைக்ரோசாப்ட் கூகுளுக்கு போட்டியாக இந்த வருடம் களமிறங்கும் ஆப்பிள் AI.!- டிம் குக்

கடந்த 25 ஆண்டுகளில் ஹீரோக்கள், முக்கிய நிகழ்வுகள், கலாச்சாரம், இடங்கள் மற்றும் பலவற்றைக் கொண்டாடும் உலகளாவிய நிகழ்வை கொண்டாடும் வகையில், கூகுள் அதற்கான சிறப்பு சித்திரத்தை வெளியிட்டு வருகிறது. கூகுள் தனது முதல் டூடுலை 1998-ல் வெளியிட்டது, இதுவரை 5,000க்கும் மேற்பட்ட டூடுல்களை வெளியிட்டுள்ளது.

READ MORE – நாங்கள் தவறு செய்துவிட்டோம்… ஜெமினி AI சர்ச்சை குறித்து சுந்தர் பிச்சை ஓபன் டாக்!

4 ஆண்டுக்கு ஒரு முறை பிறந்தநாள்

இந்த லீப் வருடதத்தன் இன்னோரு சிறப்பு என்னவென்றால், உலகில் சராசரியாக தினமும் 3.5 லட்சம் குழந்தைகள் பிறக்கின்றன. அப்படி இன்றைய தினம் (லீப் டே) பிறக்கும் அனைவரும் தங்கள் பிறந்தநாளை அடுத்த 4 ஆண்டுகளுக்கு பிறகுதான் கொண்டாட முடியும்.

அதன்படி, முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய், அர்ஜூனா விருது வென்ற பிரகாஷ் நஞ்சப்பா, பரதநாட்டிய கலைஞர் ருக்மிணி தேவி போன்றோர் லீப் வருடத்தில் பிறந்தவர்கள் என்பது குறிப்பிடத்க்கது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.

Leave a Comment