வாட்ஸ்அப்பில் LastSeen, Online மற்றும் Typing செயல்படவில்லை.! குவியும் புகார்கள்.!

வாட்ஸ் அப்பில்  புதிய பிரச்சினையாக   LastSeen, பயனர்களின் ஆன்லைன் மற்றும் டைப்பிங் ஆகியவற்றை பார்க்க இயலவில்லை என்று புகார் அளித்துள்ளனர்.

உலகில் அனைத்து மக்களும் பயன்படுத்தும் தளம் என்றால் அது வாட்ஸ்அப் தான். தற்போது வாட்ஸ்அப்பை பயன்படுத்தும் பயனாளிகளின் எண்ணிக்கை நேற்று  முதல் 2 பில்லியன் ஆக குறைந்ததாக கூறப்படுகிறது. ஏனென்றால் வாட்ஸ் அப்பில் Last Seen மற்றும் ஆன்லைன் போன்றவை காண்பிக்கப்படவில்லை என்று பல புகார்கள் வந்துள்ளன.

மேலும்  வாட்ஸ் அப்பில் உள்ள Privacy Settings -ஐ மாற்ற முடியவில்லை என்றும் தயவு செய்து மீண்டும் முயற்சிக்கும்படி காண்பிக்கப்படுவதாகவும், பயனர்கள் மற்ற பயனர்களின் ஆன்லைன் இருப்பதை அறிய முடியவில்லை என்றும், அவர்களது டைப்பிங் காண்பிக்கப்படவில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளது. இதனை இன்டர்நேஷனல் பிசினஸ் டைம்ஸ் மற்றும் இந்தியா வாட்ஸ் அப்பில் உள்ள இந்த பிரச்சினையை உறுதி செய்துள்ளது. டவுன் டிடெக்டர்  இணையதளம் அளித்த தகவலின் படி, இந்தியா மட்டுமில்லாமல் உலகெங்கிலும் உள்ள பல பயனர்கள்  வாட்ஸ் அப்பில் தற்போது நிலவி வரும் சிக்கல்களை புகாராக அளித்துள்ளனர்.