மொழி என்பது தமிழர்களின் உயிர்நாடி – முதல்வர் மு.க.ஸ்டாலின்

இந்தி மேலாதிக்கம் நம்மை ஆள்வதை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என முதல்வர் ட்வீட். 

மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானத்தை தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். அமித்ஷா குழுவின் பரிந்துரைகள், இந்தி பேசாத மாநில மக்களுக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும்.

இந்திமொழி திணிப்பு தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கிறது. தமிழினத்தை தமிழரை பண்பாட்டை காக்கும் போராட்டமாக தொடர்ந்து கொண்டே இருக்கிறோம். அனைத்து இந்திய தேர்வுகளையும் இந்தி மயமாக்க துடிக்கிறார்கள். இந்தி தெரியாதவர்கள் மத்திய அரசின் பணி பெற முடியாத வகையில் இந்தி திணிப்பு நடந்து வருகிறது.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மொழி என்பது தமிழர்களின் உயிர்நாடி. இந்தி மேலாதிக்கம் நம்மை ஆள்வதை ஒருபோதும் ஏற்க மாட்டோம். அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் அறிக்கையை எதிர்த்து, TNLA ஒரு வரலாற்றுத் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது. மீண்டும் ஒருமுறை, #StopHindiImpositionக்கு TN முன்னிலை வகிக்கிறது.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment