பதினைந்து ஆண்டுகளாகியும் மாறாத சோகம்! கும்பகோணத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளுக்கும் நினைவஞ்சலி!

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்தது அந்த கோர சம்பவம். இன்று நினைத்தாலும் நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சோக நிகழ்வு. உயிரிழந்தது உயிர் என்னவென்று தெரிந்தவர்கள் அல்ல. இந்த உலகையே இன்னும் முழுதாய் தெரியாத பிஞ்சு குழந்தைகள் ஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் 94 மொட்டுக்களின் உயிர் பிரிந்தது இன்னும் அந்தப்பகுதி மக்களை கண்கலங்க வைக்கிறது.

இதே நாளில் 2004ஆம் ஆண்டு கும்பகோணத்தில் இருந்த ஸ்ரீ கிருஷ்ணா பள்ளியில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. அந்த சம்பவத்தின் பிறகுதான், தமிழ்நாட்டின் பெரும்பாலான பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த குழந்தைகளுக்காக பாலக்கரை ஆற்று பாலத்தின் அருகே நினைவு சின்னம் அமைக்கப்பட்டது. இந்த குழந்தைகளுக்காக வருடந்தோறும் நினைவஞ்சலி மற்றும் ஊர்வலம் நடைபெறுகிறது. அந்த குழந்தைகளின் குடும்பத்தினர் வருடந்தோரும் அந்த பிஞ்சுகள் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடுகாட்டுக்கு சென்று அவர்களுக்கு பிடித்த உணவுகளை படைத்தது அஞ்சலி செலுத்திவிட்டு செல்கின்றனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.