சச்சின் தேர்வு செய்த அணியில் தோனி இல்லை அதிருப்தியில் ரசிகர்கள் !

உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது.இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியும் ,நியூஸிலாந்து அணியும் மோதியது.இப்போட்டி டை ஆனது.அதனால் சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது.சூப்பர் ஓவர் போட்டியும் டை ஆனதால் இறுதி போட்டியில் அதிக பவுண்டரி அடித்த அணியான இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.இதனால்  முதல் முறையாக  இங்கிலாந்து அணி உலகக்கோப்பை கைப்பற்றியது.

இந்நிலையில் நடப்பு உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாடிய வீரர்களை கொண்டு சச்சின் 11 பேர் கொண்ட ஒரு அணியை தேர்வு செய்து உள்ளார்.சச்சின் தேர்வு செய்த அணியில் நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனை  கேப்டனாக தேர்வு செய்து உள்ளார்.

இந்த அணியில் இந்திய அணியை சார்ந்த ஐந்து பேர் இடம் பெற்று உள்ளனர்.ஆனால் அனுபவம் மிக்க தோனி சச்சின் தேர்வு செய்த அணியில் இடம் பெறவில்லை. தோனி இந்த அணியில் இடம் பெறவில்லை என்பதால் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

சச்சின் தேர்வு செய்த அணி வீரர்கள் :

கேன் வில்லியம்சன்(கேப்டன் ) ,ரோஹித் ,பேர்ஸ்ரோ (விக்கெட் கீப்பர் ), விராட் கோலி ,ஷகிப் , பென் ஸ்டோக்ஸ் ,ஹார்திக் பாண்டிய ,ரவீந்தர ஜடேஜா ,மிட்செல் ஸ்டார்க் , பும்ரா ,ஆர்ச்சர்  ஆகியோர் இடம் பெற்றனர்.

author avatar
murugan