சர்வேதேச போட்டிகளில் குல்தீப் யாதவ் 150 விக்கெட்டை வீழ்த்தி சாதனை !

நேற்று  இந்திய அணியும் , வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதியது . இப்போட்டி  மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட்  மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டி டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 268 ரன்கள் எடுத்தது.269 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரரான கெய்ல் 6 ரன்னிலும் , ஷாய் ஹோப்  5 ரன்னில் அவுட் ஆனார்.
இந்நிலையில்  வெஸ்ட் இண்டீஸ் அணியில் சிறப்பாக விளையாடிய வந்த  நிக்கோலஸ் பூரன் விக்கெட்டை இந்திய அணியின் சுழல் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 21-வது ஓவரில் வீழ்த்தியதன் மூலம் சர்வேதேச போட்டிகளில் குல்தீப் யாதவ் வீழ்த்திய 150 விக்கெட் ஆகும்.
மேலும் இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 34.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 143 ரன்கள் எடுத்து 125 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வியடைந்தது.
91 – ஒருநாள்
35 – டி 20
24 – டெஸ்ட்

author avatar
murugan