குலசை தசரா திருவிழா – சினிமா பாடல்களுக்கு தடை : உயர்நீதிமன்ற மதுரை கிளை

குலசை தசரா திருவிழாவில் பக்தி பாடல்கள் அல்லாத பாடல்கள் மற்றும் சினிமா பாடல்கள் பாட தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு. 

ஒவ்வொரு வருடமும் குலசை தசரா திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் குலசை தசரா திருவிழா நடைபெறவுள்ள நிலையில், இந்த விழாவில்  பாடல்களுக்கு நடனமாடுவதற்கு தடை விதிக்க கோரி ராம்குமார் ஆதித்தன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், குலசை தசரா திருவிழாவில் பக்தி பாடல்கள் அல்லாத பாடல்கள் மற்றும் சினிமா பாடல்கள் பாட தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர். மேலும், கோயில் திருவிழாக்களில் ஆபாச பாடல்கள் இசைப்பதையும், ஆபாச நடனம் ஆடுவதையும் அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த விழாவில் ஆபாச பாடல்கள் ஒளிபரப்பப்படவில்லை என தூத்துக்குடி எஸ்.பி மற்றும் தூத்துக்குடி ஆட்சியர் உறுதி செய்யவேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment