தமிழக அரசின் தலைமை கொறடாவாக கோவி.செழியன் நியமனம்

தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் நேற்று பதவியேற்றுக்கு கொண்டார்  . இவருடன் சேர்ந்து 33 அமைச்சர்களும் பொறுப்பேற்றனர். இவர்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு உரிமையும் செய்து வைத்தார்.

இதையடுத்து, அண்ணா, கலைஞர் மற்றும் பெரியார் நினைவிடங்கள் சென்று மரியாதை செலுத்திய பின் தலைமை செயலகம் சென்ற முதலமைச்சர் முக ஸ்டாலின், முதற்கட்டமாக 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.

இந்நிலையில்  தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “முனைவர் கோவி.செழியன், திருவிடைமருதூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அரசு தலைமைக் கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவிடைமருதூர் தனி தொகுதியில் 2011, 2016 மற்றும் 2021 என தொடர்ந்து மூன்று முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் கோவி.செழியன் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Dinasuvadu desk