இன்னைக்கு வாணவேடிக்கை தான்…பலப்பரீட்சை நடத்தும் பெங்களூர்- கொல்கத்தா!!

RCBvsKKR : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும் பெங்களூர் அணியும் மோதுகிறது.

நடப்பாண்டு ஐபிஎல் போட்டிகள் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று கொண்டு இருக்கும் நிலையில், இன்று நடைபெறும் போட்டியில் ராயல் சேலஞ்சஸ்ர் பெங்களூர் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. இந்த இரண்டு அணிகளும் மோதும் இந்த போட்டியானது பெங்களூரு எம்.சின்னசாமி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.

நேருக்கு நேர்

இந்த போட்டிக்கு முன்னதாக இந்த இரண்டு அணிகளும் நேருக்கு நேராக 32 போட்டிகள் மோதியுள்ளது. அதில் 14 போட்டியில் பெங்களூர் அணியும், கொல்கத்தா அணி 18 முறையும் வெற்றி பெற்றுள்ளது. நேருக்கு நேர் மோதிய போட்டிகளின் கணக்குகளை வைத்து பார்க்கையில் அதிகமுறை கொல்கத்தா அணியே வெற்றிபெற்றுள்ளது.

எதிர்பார்க்கப்படும் வீரர்கள் (Probable Playing XI)

பெங்களூர் 

ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத் (விக்கெட் கீப்பர்), அல்சாரி ஜோசப், மயங்க் டாகர், முகமது சிராஜ், யாஷ் தயாள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

கொல்கத்தா 

வெங்கடேஷ் ஐயர், பில் சால்ட் (வாரம்), ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நிதிஷ் ராணா, ரின்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், ராமன்தீப் சிங், சுனில் நரைன், மிட்செல் ஸ்டார்க், ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி

இன்று நடைபெறும் போட்டியில் இரண்டு அணிகளிலும் சிக்ஸர்கள் பறக்க விட கூடிய அதிரடி வீரர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக  விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், நிதிஷ் ராணா, ரின்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், ஆகியோர் இருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் சின்னசாமி மைதானத்தில் போட்டி நடைபெறுகிறது.  எனவே, கண்டிப்பாக இந்த போட்டியில் சிக்ஸர்களுக்கு பஞ்சமே இருக்காது என்றே கூறலாம். எந்த அணி வெற்றிபெறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.