#IPL2022: தொடர்ந்து 5-வது தோல்வி.. 54 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி, 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, பிளே ஆப்ஸ் வாய்ப்பை தக்கவைத்தது.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 61-வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. புனேவில் உள்ள MCA மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங்கை தேர்வு செய்ய, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் அடித்தது. 178 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா – கேன் வில்லியம்சன் களமிறங்கினார்கள்.

இதில் 9 ரன்கள் எடுத்து கேன் வில்லியம்சன் தனது விக்கெட்டை இழக்க, அவரையடுத்து களமிறங்கிய ராகுல் திரிபாதி, 9 ரன்கள் எடுத்து வெளியேறினார். அவரையடுத்து ஐடென் மார்கம் களமிறங்க, சிறப்பாக ஆடிவந்த அபிஷேக் சர்மா, 43 ரன்கள் அடித்து வெளியேறினார். அவரையடுத்து களமிறங்கிய அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேற, இறுதியாக ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்து 54 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. மேலும் கொல்கத்தா அணி, பிளே ஆப்ஸ் வாய்ப்பை தக்கவைத்தது.

Leave a Comment