புஷ்பா பட ஸ்டைலில் கிங் கோலி.., வைரல் வீடியோ..!

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டனாக ரோஹித்தின் முதல் போட்டி இதுவாகும். இந்த போட்டி கோலி தனது கேரியரில் 100-வது டெஸ்டில் விளையாடி விளையாடினார். விராட் கோலி 100-வது டெஸ்டில் சதம் அடிப்பார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மொஹாலி மைதானத்தில் நடந்த போட்டி ஏமாற்றத்தை அளித்தது. 45 ரன்களில் ஆட்டமிழந்தது கோலி  ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தார்.

இந்நிலையில், இலங்கைக்கு எதிரான இந்த டெஸ்ட் ​ போட்டியின் மூன்றாவது நாளில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தென்னிந்தியாவின் பிளாக்பஸ்டர் படமான ‘புஷ்பா’ திரைப்படத்தில் அல்லு அர்ஜூன் தாடியை ஸ்டைலாக தடவும் முகபாவனையை  விராட் கோலி செய்தார்.

இந்த  வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  இதற்கு இதேபோன்று பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரின் போது ஷகிப் அல் ஹசன், மேற்கிந்திய தீவுகளின் டுவைன் பிராவோ மற்றும் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் ஆகியோரின் வீடியோக்கள் வைரலாக பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan