#BREAKING: கேரளா ஒத்துழைப்பின்மை: தமிழகம் நீதிமன்றத்தை நாடலாம் -உச்சநீதிமன்றம்

முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக பணிகளை மேற்கொள்ள கேரள அரசு  ஒத்துழைக்காவிட்டால் தமிழகம் நீதிமன்றத்தை நாடலாம்.

முல்லைப் பெரியாறு அணையில் நீரைத் தேக்கும் விவகாரம் தொடர்பாகவும், அணையின் பாதுகாப்பு தொடர்பாகவும் உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், ஏ.எஸ்.ஒகா, சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணை தொடர்பான பணிகளை மேற்கொள்ள கேரளா ஒத்துழைப்பு அளிப்பதில்லை என தமிழக அரசு தரப்பில் முறையிடு செய்யப்பட்டது. அப்போது நீதிபதிகள் முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக பணிகளை மேற்கொள்ள கேரள அரசு  ஒத்துழைக்காவிட்டால் தமிழகம் நீதிமன்றத்தை நாடலாம்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளா இடையூறு செய்தால் உச்சநீதிமன்றத்தை தமிழகம் நாடலாம். இதற்காக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றால் கூட அதை செய்ய தயாராக இருக்கிறோம் என தெரிவித்தனர்.

author avatar
murugan