தனது வீட்டையே கொரோனா பராமரிப்பு மையமாக மாற்றிய கர்நாடக உள்துறை அமைச்சர்!

கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை அவர்கள் ஷிகாவ்ன் நகரில் உள்ள தனது வீட்டு 50 படுக்கை அறை கொண்ட கொரோனா பராமரிப்பு மையமாக மாற்றியுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனையில் நோயாளிகள் நிரம்பி வழிவதால் மருத்துவமனை நிர்வாகம் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறது. இந்நிலையில், மத்திய மாநில அரசுகள் கொரோனாவுக்கு எதிராகவும், மருத்துவமனை உபகரணங்கள் பற்றாக்குறையை மாற்றவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒன்றாக பல்வேறு தனியார் நிறுவனங்கள் மற்றும் ஹோட்டல்கள் ஆகியவற்றையும் கொரோனா பராமரிப்பு மையமாக மாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், கர்நாடகாவிலும் கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை வசதிகள் இன்றி தவித்து வருவதால் கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை அவர்கள் ஷிகாவ்ன் நகரில் உள்ள தனது வீட்டை கொரோனா சிகிச்சை அளிப்பதற்கான பராமரிப்பு மயமாக மாற்றியுள்ளார். சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவான இவரது இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த கொரோனா சிகிச்சைக்கான மருத்துவ வளாகத்தில் 50 படுக்கை அமைக்கப்பட்டு, மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களும் அங்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், ஆக்சிஜன் செறிவூட்டிகளுடன் கூடிய 50 படுக்கைகள் அவரது வீட்டு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள பசவராஜ் பொம்மை அவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ நிபுணர்களின் குழு கொரோனா நோயாளிகளுக்கு தன் இல்லத்தில் உள்ள பராமரிப்பு மையத்தில் சிகிச்சை அளிக்கும் என தெரிவித்துள்ளார். மேலும் தற்பொழுது பசவராஜ் பொம்மை அவர்கள் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து ஹுபல்லியில் தன் இல்லத்தில் தங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Rebekal