#Breaking: கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து விற்றால் குண்டர் சட்டம் பாயும் – முதலமைச்சர் எச்சரிக்கை!

கள்ளச் சந்தையில் ரெம்டெசிவிர் விற்றால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் எச்சரிக்கை.

உயிர் காக்கும் ரெம்டெசிவிர் மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டரை தமிழகத்தில்  கள்ளச் சந்தையில் விற்பனை செய்தால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுபோன்று ஆக்சிஜன் சிலிண்டரை பதுக்கினாலும் குண்டர் சட்டம் பாயும் என்றும் முதலான்ச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனிடையே, சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மருந்துகளை பெற்று வருகின்றனர். அதில் சிலருக்கு ரெம்டெசிவிர் மருந்து கிடைப்பதில்லை என்று குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது.

இந்த நிலையில் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்துகள் விற்கப்படுவதாக பல்வேறு தரப்பில் இருந்தும் குற்றசாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில், கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்துகள் விற்றால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பேரிடர் காலத்தில் ரெம்டெசிவிர், ஆக்சிஜனை அதிக விலைக்கு விற்பது கடுமையான குற்றமாகும் என்றும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு உடனுக்குடன் சிகிச்சை அளிக்க தொய்வின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்