பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் உறுப்பினர்

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட கபில் மிஸ்ரா பாஜகாவில் இணைந்துள்ளார்.

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது.அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக இருந்து வருகிறார்.நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி எதிர்பார்த்த வெற்றியை பெற வில்லை.

ஆனால் மக்களவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் கபில் மிஸ்ரா பாஜகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார்.இதனால் இவர் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.இந்த நிலையில் இன்று டெல்லியில் பாஜக தலைவர்கள் மனோஜ் திவாரி மற்றும் விஜய் கோயல் முன்னிலையில் பாஜகாவில் இணைந்தார் .