10 கோடி ரூபாய் திருப்பி தரவில்லை என கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

கமல்ஹாசன் நடிப்பில் 2015ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் உத்தம வில்லன். இந்த படத்தை இயக்குனர் லிங்குசாமி மற்றும் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து இருந்தது. இப்படத்தை தமிழ்நாட்டில் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பாக கே.இ.ஞானவேல்ராஜா வெளியிட்டு இருந்தார்.

இப்படம் வெளியான சமயத்தில் நிதி பிரச்சனை ஏற்பட்டதாகவும். அப்போது கமல்ஹாசன் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் நிறுவனத்திற்கு ஒரு படம் நடித்து தருவதாக கமல்ஹாசன் தரப்பில் இருந்து கூறியதாகவும், அதன் பேரில் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் கமல்ஹாசன் அவர்களுக்கு 10 கோடி ருபாய் கொடுத்ததாகவும், ஆனால் தற்போது வரை படம் நடித்து கொடுக்க வில்லை ஆதலால் கமல்ஹாசன் தரப்பு பணத்தை திருப்பி  தர வேண்டும் என கூறி தயாரிப்பளார் சங்கத்தில் கே.இ.ஞானவேள்ராஜா புகார் அளித்துள்ளார்.

இந்த புகாருக்கு பதிலளிக்கும் வகையில், ‘ நிதி பிரச்சனையின் போது இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் உடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடைபெற்றது என கமல்ஹாசன் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.