BREAKING: நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே முதல்வர் கமல்நாத் பதவி ராஜினாமா .!

மத்தியபிரதேச காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்த ஜோதிர் ஆதித்ய சிந்தியா அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைத்தார். மேலும் சிந்தியா ஆதரவு மந்திரிகள் 6 பேர் உட்பட  22 எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்ததை தொடர்ந்து கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.

இதையடுத்து மாநில அரசு பெரும்பான்மையை இழந்துள்ளதால் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும்  பாஜக எம்.எல்.ஏ.க்கள் 10 பேர்  உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்நிலையில் ஒத்திவைக்கப்பட்ட மத்தியபிரதேச சட்டசபை கூட்டத்தை  இன்று மீண்டும் கூட்ட வேண்டும். கூட்டத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு  நடத்த வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று மாலை 5 மணிக்குள் முடிவடைய வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

மத்தியபிரதேச சட்டசபை இன்று பிற்பகல் 2 மணிக்கு கூட உள்ளது. இந்நிலையில் மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்தார்.

author avatar
murugan