கொரோனா அச்சத்தால் நிறுத்தப்பட்ட கேன்ஸ் திரைப்பட விழா!

கொரோனா அச்சத்தால் நிறுத்தப்பட்ட கேன்ஸ் திரைப்பட விழா!

Default Image

கடந்த சில மாதங்களாகவே கொரோனா பாதிப்பு உலகையே உலுக்கி வருகிறது. இதனால், மக்கள் அனைவரும் கொரோனா அச்சத்தில் உள்ள நிலையில், இதனை தடுப்பதற்கு அனைத்து நாடுகளிலும் பல முன்னனெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், ஒவ்வொரு வருடமும் பிரான்ஸ் நாட்டில் கேன்ஸ் திரைப்பட விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருவதுண்டு. இதனையடுத்து, தற்போது கொரோனா அச்சத்தால், இந்த திரைப்பட விழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து, கேன்ஸ் திரைப்பட விழா ஏற்பாட்டாளர்கள் கூறுகையில், ‘உலகமே பாதிக்கப்பட்டு இருக்கும் இந்த நேரத்தில் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அதனுடன் போராடிக் கொண்டிருப்பவர்களுக்கும் எங்களுடைய ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கேன்ஸ் திரைப்பட விழாவை ஒத்திவைக்க முடிவெடுத்துள்ளோம். விரைவில் சாத்தியக் கூறுகளை மதிப்பீடு செய்து, பிரான்ஸ் அரசாங்கம், திரைப்பட விழா உயர்மட்ட நிர்வாகிகள், திரையுலக நிபுணர்கள் ஆகியோரிடம் ஆலோசித்து எங்கள் முடிவை தெரியப்படுத்துவோம்.’ எனக் கூறியுள்ளனர்.

 

Join our channel google news Youtube