இதுகுறித்து கமல்ஹாசனிடம் விளக்கம் கேட்கப்படும் – ராதாகிருஷ்ணன்

கொரோனா உறுதி செய்யப்பட்டு 7 நாட்களுக்கு பிறகு தனிமைப்படுத்துதலில் ஈடுபடாமல் பொது நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பங்கேற்றது குறித்து விளக்கம் கேட்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 

மக்கள் நீதி மய்யத்தின் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக அமெரிக்கா சென்று வந்தபோது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முதல் நாளே பொது நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்குப் பின் அந்த நபர் தங்கள் வீடுகளில் ஏழு நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்பது நடைமுறையில் உள்ளது.

இதனை அடுத்து இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், கொரோனா உறுதி செய்யப்பட்டு 7 நாட்களுக்கு பிறகு தனிமைப்படுத்துதலில் ஈடுபடாமல் பொது நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பங்கேற்றது குறித்து விளக்கம் கேட்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.