நவீன இந்தியாவின் முதன்மைச் சிற்பி – கமலஹாசன்

சமத்துவம், சமூகநீதி பற்றிய நம் இன்றைய உரையாடல்களுக்குப் பாதை வகுத்துக்கொடுத்த பாபாசாகேப் அம்பேத்கரின் 65ஆவது நினைவுதினம் இன்று.

இன்று அம்பேத்கரின் 65 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து நாட்டின் முக்கிய தலைவர்கள் அவரது நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகியோர் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில், இதுகுறித்து கமல,ஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நவீன இந்தியாவை உருவாக்கிய சிற்பிகளுள் முதன்மையானவர்; சமத்துவம், சமூகநீதி பற்றிய நம் இன்றைய உரையாடல்களுக்குப் பாதை வகுத்துக்கொடுத்த பாபாசாகேப் அம்பேத்கரின் 65ஆவது நினைவுதினம் இன்று. அவரது நினைவுகளைப் போற்றுவோம்.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.