காங்கிரஸ் உடன் இணையும் கமல்ஹாசன்…!ராகுல்காந்தியை சந்தித்து கூட்டணி வைப்பதாக கூறினார் கமல்ஹாசன் …!தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பரபரப்பு தகவல்

ராகுல்காந்தியை சந்தித்து காங்கிரஸ் உடன் இணைவதாக மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் தெரிவித்தார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் பரபரப்பு தகவலை  தெரிவித்துள்ளார்
நடிகர் கமல்ஹாசன் பிப்ரவரி மாதம் 21-ந் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கினார். மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை அறிவித்தார்.
Image result for kamal haasan party

மக்கள் நீதிமைய்யம் தலைவர் கமல்ஹாசன் சமீப காலமாக தனது அரசியல் பயணத்தை தொடர்ந்து அதிகரித்து வருகிறார்.
இதேபோல் அவர் கட்சிகளையும் நேரடியாகவும் சாடி வருகின்றார்.நடிப்பிலும் பிக் பாஸ் 2 விலும் கவனம் செலுத்தி வந்தாலும் அவ்வப்போது சமூக வலைதளங்களிலும் கருத்துகளை பதிவிடுகிறார்.
Related image
அதேபோல் சமீபத்தில் கமல்ஹாசன் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்தார்.இதன் பின்னர் பல்வேறு கேள்விகள் கமல் மீது எழுந்தது.குறிப்பாக காங்கிரசுடன் ,மக்கள் நீதி மய்யம் கூட்டணியா என்ற கேள்வி எழுந்தது.
Related image
இந்நிலையில் இதற்கு பதில் தரும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர்  கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து காங்கிரசுடன் கூட்டணி வைப்பதாக மக்கள் நீதிமய்யம் தலைவர்  கமல் கூறியுள்ளார் என்று பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.அதேபோல்  கமலை பற்றி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது தவறு, அரசியல் நாகரிகத்துடன் பேச வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Comment