கள்ளக்குறிச்சி பள்ளி வழக்கு – நவ.15க்கு ஒத்திவைப்பு

கள்ளக்குறிச்சி பள்ளி தொடர்பான வழக்கு தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சீரமைக்கப்பட்ட கனியாமூர் பள்ளியை திறக்க அனுமதிக்கக் கோரிய வழக்கு விசாரணை நவம்பர் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. லதா கல்வி அறக்கட்டளை தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி கலவரத்தில் சூறையாடப்பட்ட தனியார் பள்ளி சீரமைக்கப்பட்டு விட்டதால், திறக்க அனுமதிக்க கோரி வழக்கு விசாரணையின்போது, மாணவர்கள் இடைநிற்றல் அதிகமாகி வருவதால் பள்ளியை விரைவாக திறக்க அனுமதிக்க வேண்டும் என அறக்கட்டளை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆய்வு நடத்திய குழுவின் அறிக்கை ஓரிரு நாட்களில் கிடைக்கப்பெறும், கிடைத்தபின் முடிவு எடுக்கப்படும் என தமிழக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment