கனியாமூர் பள்ளியில் வகுப்புகளை தொடங்கலாம் – ஐகோர்ட் அனுமதி

கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் வகுப்புகளை தொடங்க பள்ளி நிர்வாகத்துக்கு உயர் நீதிமன்றம் அனுமதி. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளியில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள  மாணவர்களுக்கு நேரடியாக வகுப்புகள் தொடங்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. மற்ற வகுப்புகளை தொடங்குவது குறித்து ஒரு மாதத்திற்கு பிறகு முடிவெடுக்கப்படும் என உயர்  நீதிமன்றம் நீதிபதி சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார். மேலும், பள்ளிக்கு உரிய பாதுகாப்பு அளிக்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கனியாமூர் பள்ளி மாணவி … Read more

கள்ளக்குறிச்சி பள்ளி வழக்கு – நவ.15க்கு ஒத்திவைப்பு

கள்ளக்குறிச்சி பள்ளி தொடர்பான வழக்கு தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சீரமைக்கப்பட்ட கனியாமூர் பள்ளியை திறக்க அனுமதிக்கக் கோரிய வழக்கு விசாரணை நவம்பர் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. லதா கல்வி அறக்கட்டளை தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி கலவரத்தில் சூறையாடப்பட்ட தனியார் பள்ளி சீரமைக்கப்பட்டு விட்டதால், திறக்க அனுமதிக்க கோரி வழக்கு விசாரணையின்போது, மாணவர்கள் இடைநிற்றல் அதிகமாகி வருவதால் … Read more

கள்ளக்குறிச்சி பள்ளியை அரசு ஏற்று நடத்த உத்தரவிடக் கோரி வழக்கு!

கள்ளக்குறிச்சி பள்ளியை அரசு ஏற்று நடத்த உத்தரவிடக் கோரி தேசிய மக்கள் கட்சி தலைவர் வழக்கு. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி கடந்த ஜூலை 13-ஆம் தேதி பள்ளி வளாகத்தில் தற்கொலை செய்து கொண்டார். மாணவி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, நீதி கேட்டு தொடர்ந்து மாணவியின் தாயார் பல்வேறு போராட்டங்களை நடத்தினார். அதன் பிறகு ஜூலை 17-ஆம் தேதி பள்ளி முன் நடைபெற்ற போராட்டம் மிகப்பெரிய வன்முறையாக … Read more

கனியாமூர் தனியார் பள்ளியில் 68 நாட்களுக்குப் பிறகு மறு சீரமைப்பு பணிகள் தொடக்கம்!

போலீஸ் பாதுகாப்புடன் கனியாமூர் தனியார் பள்ளியில் 68 நாட்களுக்குப் பிறகு மறு சீரமைப்பு பணிகள் தொடக்கம். கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி கடந்த ஜூலை 13-ஆம் தேதி பள்ளி வளாகத்தில் மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்துகொண்டதாக தகவல் கூறப்பட்டது. மாணவி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, நீதி கேட்டு தொடர்ந்து மாணவியின் தாயார் பல்வேறு போராட்டங்களை நடத்தினார். அதன்பிறகு ஜூலை 17-ஆம் தேதி பள்ளி முன் … Read more

கள்ளக்குறிச்சி வன்முறை; கைதான இளைஞருக்கு நிபந்தனை ஜாமீன்!

கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி வன்முறை தொடர்பான வழக்கில் பட்டதாரி இளைஞருக்கு நிபந்தனை ஜாமீன். கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளி வளாக வன்முறை சம்பவத்தின் போது காவல்துறையினரை தாக்கி, வாகனங்களுக்கு தீ வைத்ததாக கூறி கைது செய்யப்பட்ட பட்டதாரி இளைஞருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, 4 வாரங்களுக்கு தினமும் 2 வேளை கல்பாக்கம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் எனவும் பட்டதாரி இளைஞர் ஆகாஷ் என்பவருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவத்தில் புதிய ஆதாரம் !

கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவத்தில் மாணவியின் தாயார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட புதிய ஆதாரம் ஒன்று வெளியாகி இருக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி கடந்த ஜூலை 13-ஆம் தேதி பள்ளி வளாகத்தில் மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்துகொண்டதாக தகவல் கூறப்பட்டது. மாணவி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, நீதி கேட்டு தொடர்ந்து மாணவியின் தாயார் பல்வேறு போராட்டங்களை நடத்தினார். அதன்பிறகு ஜூலை 17-ஆம் தேதி … Read more

#BREAKING: கனியாமூர் பள்ளி வன்முறை – கைதான 5 பேருக்கு ஒரு நாள் காவல்!

கனியாமூர் பள்ளி வன்முறை தொடர்பாக கைதான 5 பேருக்கு ஒரு நாள் காவல் விதிப்பு. கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி வன்முறை தொடர்பாக கைதான 5 பேருக்கு ஒரு நாள் காவல் விதிக்கப்பட்டது. கைதான 5 பேரையும் 24 மணிநேரம் காவலில் எடுத்து சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரிக்க கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கனியாமூர் பள்ளி வன்முறை தொடர்பாக மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட செயலாளர் ராமலிங்கம், சரண்குரு, கோபு, மணிகண்டன், பிரதீப் ஆகியோர் கடந்த … Read more

#JustNow: அனுமதியின்றி இயங்கிய கள்ளக்குறிச்சி பள்ளி விடுதி – மாநில குழந்தைகள் நல ஆணையர்

அனுமதி பெறாமல் விடுதி நடத்தியது தண்டனைக்குரிய குற்றம் என்று மாநில குழந்தைகள் நல ஆணையர் பேட்டி. கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி விடுதி அனுமதியின்றி இயங்கியுள்ளது என்று மாநில குழந்தைகள் ஆணையர் நல சரஸ்வதி தெரிவித்துள்ளார். கடந்த 13ம் தேதி மாணவி இறந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் மாநில குழந்தைகள் நல ஆணையர் இன்று விசாரணை மேற்கொண்டார். இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி ரங்கசாமி, … Read more