கலைஞர் நினைவு நூலகம்! அடுத்த மாதம் 30-க்குள் 100% நிறைவு பெறும் – அமைச்சர் எ.வ.வேலு

கலைஞர் நினைவு நூலக கட்டுமான பணி அடுத்த மாதம் 30ம் தேதிக்குள் 100% நிறைவு பெறும் என அமைச்சர் தகவல்.

சர்வதேசத் தரத்தில் ரூ.114 கோடி செலவில் மதுரையில் அமையவிருக்கும் கலைஞர் நினைவு நூலகக் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக மதுரை புது நத்தம் சாலையில் பொதுப்பணித்துறை குடியிருப்பு வளாகத்தில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் கலைஞர் நினைவு நூலகம் பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கலைஞர் நினைவு நூலக கட்டுமான பணி அடுத்த மாதம் 30ம் தேதிக்குள் 100% நிறைவு பெறும் என்று அமைச்சர் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

மேலும், மதுரையில் ரூ.900 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் பல்வேறு ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளில், முடிக்கப்பட்ட பணிகள் விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். தேனி மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், ஐந்து புறவழிச் சாலைகளுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் குறிப்பிட்டார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment