திமுக ஆட்சியை கல்விக்கு பொற்காலம் என்பது நகைப்புக்குரியது – ஓபிஎஸ்

திமுக ஆட்சியை கல்விக்கு பொற்காலம் என்பது நகைப்புக்குரியது என விமர்சித்து ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், தனது ட்விட்டர்  பக்கத்தில், அஇஅதிமுக ஆட்சியில் தான், உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை தேசிய சராசரியை விட 2 மடங்காக அதிகரித்தது எனும்போது, திமுக ஆட்சியை கல்விக்கு பொற்காலம் என்பது நகைப்புக்குரியது என விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ‘அறிவார்ந்த சமுதாயத்தை படைக்க வேண்டுமென்றால், மனித வளத்தினை மேம்படுத்த வேண்டுமென்றால் அதற்கு முக்கிய காரணியாக விளங்குவது உயர் கல்வி தான் என்பதை நன்கு அறிந்து, கலை, அறிவியல், பொறியியல், சட்டம், மருத்துவம் என அனைத்துப் படிப்புகளிலும் புதிய பாடப் பிரிவுகளை துவக்கி, கூடுதல் இருக்கைகளை உருவாக்கி சாதனை படைத்த அரசு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு. இந்த உண்மையை முற்றிலும் மறைத்து, தி.மு.க.வின் ஆட்சிக் காலம் கல்லூரியின் பொற்காலம் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிலே பேசியிருப்பது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது.’ என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment