கொடியேற்றத்துடன் தொடங்கிய கச்சத்தீவு திருவிழா..!

கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழா இன்றும் நாளையும் நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகத்திலிருந்து 76 பக்தர்கள் நான்கு படகில் சென்றுள்ளனர்.

இந்த  நிலையில்,கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா தற்போது கொடியேற்றத்துடன் தொடங்கியது. அந்தோணியார் உருவம் பதித்த கொடியேற்றப்பட்டு சிலுவைப்பாதை திருப்பலி அந்தோணியார் தேர் பவனி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவை சேர்ந்த 76 பக்தர்களும், இலங்கையை சேர்ந்த 88 பக்தர்களும் இந்த விழாவில் பங்கு கலந்து கொண்டுள்ளனர். இரண்டாவது நாளான நாளை காலை 7 மணிக்கு திருப்பலி நடந்தபின் காலை 9 மணியளவில் திருவிழா நிறைவு பெறுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.