‘கரிசல் இலக்கியத்தின் தந்தை’ எழுத்தாளர் கி.ரா காலமானார்

கரிசல் இலக்கியத்தின் தந்தை எழுத்தாளர் கி.ராஜநாராயணன் உடல்நலக்குறைவால் காலமானார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த இடைச்செவல் கிராமத்தில் 1922-ம் ஆண்டு பிறந்தவர் கி.ராஜநாராயணன். 7-ம் வகுப்பு வரை படித்துவிட்டு விவசாயம் பார்த்து வந்த கி.ராஜநாராயணன், பின்னர் எழுத்தாளராக மாறினார்.

கரிசல் இலக்கியத்தின் தந்தை என போற்றப்படுபவர் எழுத்தாளர் கி.ராஜநாராயணன். ‘கோபல்லபுரத்து கிராமம்’ நாவலுக்காக இவருக்கு சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டது.

சிறுகதை, நாவல், குறுநாவல், கிராமிய கதைகள் என இலக்கியத்தின் பல்வேறு தளங்களில் இயங்கியவர். சாகித்ய அகாடமி விருது, தமிழக அரசின் விருது, கனடா நாட்டின் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை  பெற்றுள்ளார்.

கி.ரா புதுச்சேரி லாசுப்பேட்டையில் உள்ள அரசுக் குடியிருப்பில் வசித்து வந்த இவர், வயது முதிர்வின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று நள்ளிரவு காலமானார்.

author avatar
Dinasuvadu desk