மலர்கிறதா??தாமரை ம.பி..!பாஜக இணையும் சிந்தியா…ஓரே போடாக கமல்நாத்தை போட்ட சிந்தியா.. உச்சகட்ட குழப்பம்

மத்திய பிரதேசத்தில் செல்வாக்குமிக்க தலைவரான கோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணையவிருப்பதாக வெளியாகிய தகவலால் கமல்நாத்திற்கு கூடுதல் தலைவலி ஏற்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அமைச்சரவை கலைக்கப்பட்டது. 16 எம்எல்ஏக்கள் பெங்களூரில் ரிசார்ட்டில் தங்கிய நிலையில்  முதல்வர் கமல்நாத் இரவோடு இரவாக அமைச்சரவை கலைத்துவிட்டார். 22 அமைச்சர்களும் இரவோடு இரவாக பதவி விலகிய சம்பவம் மத்தியபிரதேச அரசியலில் அதிரடி திருப்பத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Image result for madhya pradesh POLTICS

மத்திய பிரதேசத்தில் தன் ஆட்சி கவிழ்வதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கியதை அடுத்து இந்த அதிரடி கலைப்பை கமல்நாத்   நிகழ்ந்தியுள்ளார் என்று கூறப்படுகிறது.மத்திய பிரதேசத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்யா சிந்தியாவிற்கும் கமல்நாத்திற்கும் இடையே பனிப்போர் நிலவி வந்த நிலையில் தற்போது அது பகீரங்கமாக வெளிக்கு வந்துள்ளது.தற்போது சிந்தியா அவருடைய ஆதாரவாளர்கள்  16 எம்எல்ஏக்களோடு மாயமாகி விடவே உச்சக்கட்ட பதற்றம் தொற்றிக்கொண்டது.ஆட்சி கவிழும் சூழலை சுதாரித்து கொண்ட கமல்நாத் இந்த கலைப்பு நடவடிக்கை கையில் எடுத்துள்ளார்.

சிந்தியா உள்ளிட்ட அவருடைய ஆதரவாளர்கள் எல்லோரும் பெங்களூரில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கி இருந்ததாகவும் இன்று காலை தான் பெங்களூரில் இருந்து சிந்தியா டெல்லி திரும்பியதாக கூறப்படுகிறது.கமல் நாத் அமைச்சரவை கலைப்பு வெளியாகமால் இருந்திருந்தால் இவர்களே  ஆட்சியை கவிழ்க்கு நடவடிக்கையாகவே மாயமாகி தங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

Image result for madhya pradesh POLTICS

ஆனால் மத்திய பிரதேசத்தில் ஆட்சியை கவிழ்க்க இதற்கு முன்பு பாஜக பல முயற்சிகளை செய்தது. ஆனால் கமல்நாத் அதனை தீவிரமாக முயன்று, ரிசார்ட்டிற்கு சென்ற எம்எல்ஏக்களை எல்லாம் மீட்டு கொண்டு வந்தார். இப்போது அங்கு பாஜக எதுவும் செய்யாமல் தானாக ஆட்சி கவிழும் நிலைக்கு வந்து உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு உள்ளேயே  குழப்பம் பகீரங்கமாக வெடித்து உள்ளதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றனர். இந்த தருணத்தை பயன்படுத்தி கொள்ள பாஜக தங்கள் பக்கம் சிந்தியாவை இழுக்க திட்டடுள்ளதாகவும் ஆட்சியை கவிழ்க்க முயல்வதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Image result for jyotiradityascindia

கடும் நெடுக்கடி ஏற்படவே  கமல்நாத் தன் அமைச்சரவையை கலைத்தார். இந்த கலைப்பு முன் முதல்வர் கமல்நாத் இரவோடு இரவாக ஒரு  மீட்டிங் ஏற்பாடு செய்தார் அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது மேலும் அம்மாநிலத்தில் 22 அமைச்சர்களும் இரவோடு இரவாக  பதவி விலகி உள்ளனர். மாயமான அல்லது மாயமாக்கப்பட்ட 16 எம்எல்ஏக்களுக்கு அமைச்சரவை பதவி வழங்கி அவர்களை  சமாதானம் செய்கின்ற வகையில் கமல்நாத் இறங்கி உள்ளதாக கூறப்படும் நிலையில் தற்போது சிந்தியா பாஜகவில் இணைய உள்ளதாக வெளியான தகவல் மத்திய பிரதேச காங்கிரஸ் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் உச்சக்கட்ட பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Image result for jyotiradityascindia

மத்திய பிரதேசத்தில் செல்வாக்கு பெற்ற காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான  ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைய விருப்பதாகவும் , அவருக்கு எம்.பி பதவி வழங்க பாஜக திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.இதனால் எப்படியாவது சமாதானம் செய்துவிடலாம் என்ற கமல் நாத்திற்கு இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த தகவல் ம.பி அரசியலில் கூடுதல் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

author avatar
kavitha