#JustNow: மாநிலங்களவைக்கு மீண்டும் தேர்வாகிறார் நிர்மலா சீதாராமன்..!

கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தேர்வாகிறார்.

தமிழ்நாடு உட்பட 15 மாநிலங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு ஜூன்10-ஆம் தேதி மாநிலங்களைவர் தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. தமிழ்நாட்டில் 6 இடங்கள் உட்பட மாநிலங்களவை உறுப்பினர்கள் 57 பேரை தேர்வு செய்ய ஜூன் 10ல் தேர்தல் நடைபெறுகிறது.

இந்த நிலையில், மாநிலங்களவைக்கு மீண்டும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தேர்வாகிறார். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் மாநிலங்களவை உறுப்பினருக்கான பதவிக்காலம் ஜூன் 30-ல் முடிவடைய உள்ள நிலையில், கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நிறுத்த பாஜக முடிவு செய்துள்ளது.

இதனிடையே, தமிழ்நாட்டில் ஆர்எஸ் பாரதி, டிகேஎஸ் இளங்கோவன், ராஜேஷ்குமார், நவநீதகிருஷ்ணன், எஸ்ஆர் பாலசுப்பிரமணியன் மற்றும் ஏ.விஜயகுமார் ஆகிய 6 எம்பிகளின் பதவிக்காலம் ஜூன் 29ல் முடிவடைகிறது. இதனால் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment