#JustNow: நீட் தேர்வு – அரியலூரை சேர்ந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை!

நீட் தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில், அரியலூரை சேர்ந்த மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை.

நீட் தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில், அரியலூரை சேர்ந்த மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 430 மதிப்பெண்கள் எடுத்து நீட் தேர்வுக்காக விண்ணப்பித்திருந்த மாணவி, தோல்வி பயத்தில் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் மாணவியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், மாணவியின் தற்கொலை குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே, எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நாளை நீட் நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளது. தமிழ், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் தேர்வு நடைபெறும் நிலையில், 18.72 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்கின்றனர்.

இந்த நிலையில், அரியலூர் ரயில்வே காலனியை சேர்ந்த நிஷா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவி நிஷா ஏற்கனவே நீட் தேர்வு எழுதிய நிலையில் மீண்டும் 2 ஆம் முறையாக தேர்வு எழுத தயாராகி வந்தார் என்றும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment