இந்தியாவில் சுற்றி பார்க்க சூப்பரான நான்கு இடங்கள்..!

விடுமுறை நாட்களில் இந்தியாவில் உள்ள இந்த நான்கு இடங்களை சுற்றி பாருங்கள்.

ஹம்பி: வரலாற்று காலத்தில் இந்தியாவில் சிறந்து விளங்கிய இந்து சாம்ராஜ்யங்களில் ஒன்று விஜயநகரம். விஜயநகர ஆட்சி காலத்தில் கடைசி தலைநகரமாக விளங்கிய இடம் தான் ஹம்பி. இது கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒரு சுற்றுலா தலமாகவும், சிறப்பு வாய்ந்த வரலாற்று நினைவு சின்னங்கள் இருக்கும் இடமாகவும் அறிப்படுகிறது. இது மிக முக்கியமான இந்தியாவின் வரலாற்றில் சிறந்து விளங்கிய நகரம் ஆகும். இது பார்ப்பதற்கு மிகவும் பெரிய பரப்பளவில் பரந்து விரிந்த இடம். இதில் கற்பாறைகள் ஏராளம். அதிலும் இங்கு இருக்க கூடிய வேலைப்பாடுகள் பார்ப்பவரை கண்கவரும் வகையில் இருக்கும். இருந்தபோதிலும் இதில் இடிபாடுகள் நிறைந்து இருக்கிறது. அதனால் பல்வேறு நினைவு சின்னங்கள் இதில் அடங்கியிருக்கின்றன. மேலும் இந்த இடத்திற்கு கோவாவிலிருந்து வருகை தர பல்வேறு போக்குவரத்து வசதிகள் இருக்கின்றன.

கேரளா பேட் வாட்டர்: இயற்கையை விரும்புபவர்கள் நிச்சயம் பார்த்து ரசிக்க வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று. கேரளாவில் உள்ள படகு வீடு பார்ப்பவர் அனைவரையும் அங்கேயே இருக்கும்படி செய்ய வைக்கும். அந்த அளவு இயற்கை வண்ணம் அதிகமாக இருக்கும். கேரளாவில் உள்ள கால்வாய்க்கு இடையே செல்லும் படகில் இரவு முழுவதும் சென்று வர யாருக்குத்தான் பிடிக்காது. அதிலும், சுட சுட அங்கே கிடைக்கும் பாரம்பரிய கடல் உணவை ரசிக்க முடியும். அனைவரும் சுற்றி பார்க்க செல்லும் இடத்தில தங்குவதற்கு இடம் பார்ப்பார்கள். ஆனால், இங்கு சுற்றி பார்க்கும் இடமும் தங்கும் இடமும் ஒரே இடம் தான். அமைதியான சூழலில் தென்றல் காற்றில் படகில் இரவு நேரத்தில் செல்ல விரும்பும் நபர்கள் இந்த இடத்தை தேர்வு செய்யலாம். இங்கு தங்குவதற்கு சாப்பிடுவதற்கு என அனைத்திற்கும் நல்ல வசதி நிறைந்து இருக்கிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்: தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களில் ஒன்று மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோயில். தமிழ்ச்சங்கம் வளர்த்த மதுரை மாநகரம் 4000 வருடம் பழமையானது. அதிலும் இந்த கோயில் அங்கிருக்கும் பல்வேறு சிறப்புகள் கொண்டு விளங்குகின்றது. இந்த சிவன் கோயிலின் மூலவர் சுந்தரேசுவரர், அம்பிகை மீனாட்சி அம்மன். சிறப்பாக விளங்கும் இந்த கோயிலில் தினமும் பக்தர்களும், சுற்றுலாப்பயணிகளும் வருகை தருகின்றனர். 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கோயில் கலையழகுடன் பல்வேறு மண்டபங்களுடன், சிறப்பான சிற்ப வேலைப்பாடுகளுடன் இருக்கின்றது. இங்கு அஷ்டசக்தி மண்டபம், மீனாட்சி நாயக்கர் மண்டபம், முதலி மண்டபம், ஊஞ்சல் மண்டபம், கம்பத்தடி மண்டபம், கிளிக்கூட்டு மண்டபம், மங்கையர்க்கரசி மண்டபம், சேர்வைக்காரர் மண்டபம், திருக்கல்யாண மண்டபம், ஆயிரங்கால் மண்டபம், வீரவசந்தராயர் மண்டபம் அமைந்துள்ளது.

மாமல்லபுரம்: தமிழகத்தில் உள்ள சென்னையில் இருந்து 1 மணி நேர தூரம் பயணிக்கும் தொலைவில் உள்ளது மாமல்லபுரம். இது ஒரு கடற்கரை பகுதியில் உள்ள சிற்பங்கள் அமைந்துள்ள சிறப்பான இடமாகும். இதில் முக்கியமாக குடைவரைக்கோயில்கள், ஒற்றைக்கல் கோயில்கள், கட்டுமான கோயில்கள் என பல்வேறு சிற்பங்கள் அமைந்துள்ளது. பஞ்சபாண்டவ இரதம் எனப்படும் ஐந்து இரதங்கள், வலையன்குட்டை இரதம், பிடாரி இரதங்கள் எனப்படும் இரு இரதங்கள், கணேச இரதம் போன்றவை சிறப்பு மிக்க பார்வை இடங்களாக இருக்கும். அங்கே காணப்படும் புடைப்பு சிற்பங்கள் கலைநயம் மிக்கவையாக இருக்கும்.

Leave a Comment