#JustNOW: மின்சார டிராக்டர், லாரிகள் விரைவில் அறிமுகம் – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

விரைவில் மின்சாரத்தில் இயங்கும் டிராக்டரை அறிமுகப்படுத்த உள்ளதாக மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு.

மகாராஷ்டிரம் மாநிலம் புனேவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, மின்சார ஸ்கூட்டர்கள், கார்கள், பேருந்துகள் போன்று, மின்சார டிராக்டர், லாரிகள் விரைவில் அறிமுகம் செய்யப்பட்டு, பயன்பாட்டிற்கு வரும் என தெரிவித்தார். எத்தனால், மெத்தனால் போன்று, மின்சாரமும் மாற்று எரிசக்தியாக பெருமளவில் பயன்படுத்தப்படும்.

எரிபொருள் தேவையில் தன்னிறைவை அடைவதோடு, நாட்டில் சுற்றுசூழலுக்கு பாதுகாக்கப்படும். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மின்வாகனம் குறித்து நான் பேசும்போது பலரும் கேள்வி எழுப்பினர். தற்போது மக்கள் அவற்றை வாங்க காத்திருக்கின்றனர். இதனால், விரைவில் எலக்ட்ரிக் டிராக்டர், லாரியையும் நான் தொடங்கி வைப்பேன் என்றும் இத்தகைய வாகனங்கள் சந்தைக்கு வருமானால் அதனால் புகை இருக்காது என்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாது எனவும் கூறினார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment