ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பாகிஸ்தான் கொடியை அகற்றி பத்திரிகையாளர் கைது

பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரின் தத்யால் எனும் நகரில் பாகிஸ்தான் கொடியை அகற்றிய பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காஷ்மீரில் தத்யால் எனும் நகர் பாகிஸ்தானால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அதன் பொது இடத்தில் பாகிஸ்தான் நாட்டின் தேசியக்கொடி பறக்க விடப்பட்டுள்ளது. இதற்கு சமூக ஆர்வலரும் பத்திரிகையாளரும் ஆகிய தன்வீர் அகமது என்பவர் கடந்த சில நாட்களாகவே எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். மேலும் அந்த கொடியை அகற்ற வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்து இருந்ததுடன், உண்ணாவிரதம் இருந்தும் அவர் போராட்டம் நடத்தியுள்ளார். ஆனால் இந்த பகுதி நிர்வாகம் கொடியை இறக்க முன்வராததால் அகமது அந்தக் கொடியை தானாகவே அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தி உள்ளார்.
இதுகுறித்து அகமதுவே வெளியிட்டுள்ள வீடியோவில், பாகிஸ்தானின் தேசிய கொடியை நான் தான் அகற்றினேன். இதனால் உளவு அமைப்புகள் என்னை பின்தொடர தொடங்கியுள்ளது என அவர் கூறியுள்ளார். மேலும், சதுக்கத்தில் இருந்த இரண்டாவது பாகிஸ்தான் தேசியக் கொடியையும் சுவரில் ஏறி அவர் அப்புறப் படுத்தி உள்ளார். இதனால் பாகிஸ்தானிய அமைப்புகள் மற்றும் பாதுகாப்பு படையினர் அவரைக் கைது செய்து துன்புறுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
author avatar
Rebekal