அமெரிக்காவின் முதல் இனவெறி பிடித்த அதிபர் டிரம்ப் – ஜோ பைடன்

அமெரிக்காவின் முதல் இனவெறி பிடித்த அதிபர் டிரம்ப் என்று ஜனநாயக கட்சியின்  அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவிவருகிறது. ஆனால் அங்கு கொரோனா பரவி வரும் சூழலிலும் தேர்தல் பணிகள் நடைபெற்று வருகிறது.அங்கு இந்தாண்டு நவம்பர் மாதம் 3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் முக்கியமாக இரண்டு கட்சிகள் கருதப்படுகிறது. அது, ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி. குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். மேலும், ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபரான ஜோ பைடன் போட்டியிடுகிறார்.அமெரிக்காவில் தேர்தல் நெருங்கவுள்ள நிலையில், தேர்தல் பரப்புரைகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

 இதனிடையே ஜோ பைடன் காணொளி காட்சி மூலமாக பரப்புரை மேற்கொண்டார்.அப்பொழுது அவர் பேசுகையில், என்னைப் பொருத்தவரையில் அமெரிக்காவின் முதல் இனவெறி பிடித்த அதிபர் யார் என்றால் அது டிரம்பாக  மட்டும்தான் இருக்க முடியும்.டிரம்பை போல அமெரிக்காவில் யாரும் மக்களை இனவெறியுடன் அணுகியது கிடையாது.மக்களின் தோலின் நிறம், அவர்களின் நாட்டின் தோற்றம், அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டு டிரம்ப் கையாளும் விதம் முற்றிலும் நோய்வாய்ப்பட்டது என்று பேசியுள்ளார்.