கட்டண உயர்வு மற்றும் ஆடை கட்டுப்பாடுகளை எதிர்த்து டெல்லி மாணவர்கள் போராட்டம்! போலீசார் குவிப்பு!

டெல்லியில் உள்ள ஜவர்ஹர்லால் நேரு பல்கலைக்கழத்தில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெற உல்ளது. அங்கு சிறப்பு விருந்திரைனராக துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு கொள்ளவுள்ளார்.
இந்நிலையில் அந்த கல்லூரியில் பயிலும் மாணவர்கள் அக்கல்லூரியில் கல்விக்கட்டணம்  ஏற்றப்பட்டதற்கும், கல்லூரி நிர்வாகம் விடுத்துள்ள துணி கட்டுப்பாடு விதிமுறைகளுக்கும் எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்தினை கட்டுப்படுத்த அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தடுப்பு வேலி அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்து வருகின்றனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.