காவல் துறையை காரசாரமாக விமர்சித்திருக்கும் ‘ஜிப்ஸி’ படத்திலிருந்து ‘வெரி வெரி பேட்’ பாடல் ரிலீஸானது!!!

குக்கூ, ஜோக்கர் போன்ற தரமான படங்களை இயக்கிய ராஜூ முருகன் அடுத்து நடிகர் ஜீவாவை வைத்து ஜிப்ஸி எனும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் ஷூட்டிங் முழுவதும் முடிவடைந்து விட்டது. ரிலிற்கு தயாராகி வருகிறது.

இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். இதனை தொடர்ந்து, படத்தின் முதல் பாடலுக்கான டீசர் வெளியிடப்பட்டு தமிழ்நாட்டில் நடக்கும் பிரச்சனைகளை பற்றி கூறப்பட்டிருந்தது.

தற்போது இந்த வெரி வெரி பேட் என தொடங்கும் முதல் பாடல் தற்போது ரிலீஸாகியுள்ளது. இதில் காவல் துறையை பார்த்து கேள்வி கேட்பது போல வரிகள் இடம்பெற்றுள்ளன. இந்த பாடல் தற்போது வைரலாக பரவி வருகிறது.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment