தனது 5ஜி ஆட்டத்தை ஆரம்பித்தது ஜியோ.! எந்தெந்த நகரங்களில்.? எவ்வாறு பெறுவது.?

தற்போது 5ஜி சிம், 5ஜி ஸ்மார்ட் போன் மாற்ற தேவையில்லை. மும்பை, டெல்லி, கொல்கத்தா, வாரணாசி பகுதிகளில் மட்டும் குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுத்து சோதனை ஓட்டமாக 5ஜி சேவை சோதனை செய்யப்படும் என ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. 

அண்மையில் தான் பிரதமர் மோடி இந்தியாவில் 5ஜி சேவையை ஆரம்பித்து வைத்தார். முதற்கட்டமாக பிரதான முக்கிய நகரங்களில் ஆரம்பிக்கப்படும் என கூறப்பட்டது.

தற்போது இதன் முதற்கட்ட வேலைகளை ஜியோ ஆரம்பித்துள்ளது. ஜியோ நிறுவனம் டெல்லி, மும்பை, கொல்கத்தா, வாரணாசி ஆகிய நகரங்களில் இன்று முதல் தனது 5ஜி சேவையை சோதனை ஓட்டமாக ஆரம்பிக்க உள்ளது.

இதனை பெற ஜியோ வெல்கம் ஆஃபரை பெற வேண்டும். இதனை எந்த வகையிலும் தற்போது பெற முடியாது. குறிப்பிட்ட வாடிக்கையாளர்களை ஜியோ நிறுவனமே தேர்வு செய்து அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படுமாம். அதனை அடுத்து அவர்கள் 5ஜி சேவையை பெறலாம்.

இதற்கான கட்டண விவரங்கள் இன்னும் பட்டியலிடப்படவில்லை. டிசம்பர் 2023க்குள் நாட்டில் உள்ள அனைத்து ஜியோ வாடிக்கையாளர்களுக்கும் ஜியோ நிறுவனம் 5ஜி சேவையை வழங்கும் என ஜியோ முதன்மை அதிகாரி முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

தற்போதைக்கு ஜியோ 4ஜி சிம்மை 5ஜி சிம்மாக மாற்றுவதோ, தங்களது மொபைலை மாற்றி 5ஜி மொபைலாக மாற்றவோ தேவையில்லை.  தேர்ந்தெடுக்கப்படும் சோதனை ஓட்ட வடிக்கையாளர்கள் மட்டும் 5ஜி அலைக்கற்றையை ஏற்கும் வண்ணம் மொபைல் போன் வைத்திருக்க வேண்டும் என மட்டும் நிறுவனத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment