‘மாஸ்டர்’ விஜய் லுக்கில் வெளியான ஹீரோயின் மாளவிகா மோகனின் அசத்தல் புகைப்படம்!

  • மாஸ்டர் படத்தின் நாயகி மாளவிகா மோகன், அந்த பாஸ்ட் லுக் போன்று ப்ளர் லுக்கில் போட்டோஷூட் ஒன்று நடத்தியுள்ளார்.
  • மாளவிகா மோகன் ஜிகு, ஜிகுவென ஜொலிக்கும் வெள்ளி நிற உடையில் கவர்ச்சியாக கொடுத்துள்ள புகைப்படம் மாஸ்டர் படத்தின் பஸ்ட் லுக் போன்றே இருப்பதால் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

கார்த்திக் சுப்ராஜின் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்டை படம் மூலமாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகன். இவர் மலையாளம் திரையுலகில் முதல் படம் நடித்த பிறகு தமிழ் சினிமாவில் பேட்டை படம் மூலம் அறிமுகமானார். பின்னர் ஹிந்தி, கன்னட என பல மொழிகளில் நடித்து வருகிறார். அவ்வப்போது மாடல் போட்டியிலும் கலந்து வருகிறார். தற்போது தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் பார்வை புத்தாண்டு முன்னிட்டு வெளியிடப்பட்டது, அது சமூக வலைத்தளத்தில் வைரலாகி பல சாதனைகளை படைத்தது.

அதைத்தொடர்ந்து இரண்டாவது பார்வை பொங்கலை முன்னிட்டு வெளியானது. மாஸ்டர் படத்தின் முதல் பார்வை இதுவரை விஜய் நடித்த படங்களில் ஒரு வித்தியாசமான கெட்டப்பில் வடிவைமைக்கப்பட்டிருந்தது. அந்த போஸ்டரில் நடிகர் விஜய் சிம்பலாக டேபுளில் காப்பை சுற்றிவிட்டு ஆள்காட்டி விரலை கீழே காட்டியும், மற்றோரு கையை தலையில் வைத்தும், கரும் தாடியுடன் இளமையாகவும், ஆக்ரோசமாகவும் எதிரில் உள்ளவரை பார்ப்பதுபோல் அமைந்திருந்தது. மேலும் அந்த போஸ்டர் முழுவதும் ப்ளராக ஏதோ போதையில் இருப்பது போன்று இருந்தது. இது அனைவராலும் மிகவும் கவரப்பட்டு உலகளவில் ட்ரண்டில் மட்டுமில்லாமல் அதிக ரீட்வீட் செய்ததில் சாதனை படைத்தது.

இந்நிலையில், அந்த படத்தின் நாயகி மாளவிகா அதே மாதிரி ப்ளர் லுக்கில் போட்டோஷூட் ஒன்று நடத்தியுள்ளார். சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் மாளவிகா மோகன், அவ்வப்போது அவரது கவர்ச்சியான புகைபடங்களை பதிவிட்டு வருகிறார். அது என்னவென்று தெரியலை தளபதி கூட நடிக்கும் நடிகைகளுக்கு லைக்சும், ஷேரூம் அதிகமாகும் அதுபோன்று இவர் பதிவிட்ட மாஸ்டர் லுக் போட்டோவை அவரது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். ரசிகர்கள் லைக்கும், ஷேரும் குவித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் அந்த போஸ்டரை வைரலாகி விட்டனர்.

அந்த போஸ்டரில் மாளவிகா மோகன் ஜிகு, ஜிகுவென ஜொலிக்கும் வெள்ளி நிற உடையில் கவர்ச்சியாக கொடுத்துள்ள புகைப்படம் அனைத்து இளைஞரையும் கவர்ந்து லைக்ஸ் குவிக்கிறது. பார்ப்பதற்கு அப்படியே மாஸ்டர் படத்தின் பஸ்ட் லுக் போன்றே இருக்கும், அந்த போட்டோஷூட் சோசியல் மீடியாவில் வேகமாக வைரலாகி வருகிறது.

பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Recent Posts

டி20 உலக கோப்பை… மார்க்ரம் தலைமையில் தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு!

T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு. ஐசிசியின் டி20 உலகக்கோப்பை…

1 hour ago

வின்னர் படத்தை வச்சு தெலுங்கு சினிமாவை பழி வாங்க முயன்ற சுந்தர் சி! கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி?

Winner : தெலுங்கு சினிமாவை பழி வாங்க வின்னர் படத்தை காப்பி அடித்து எடுத்தேன் என சுந்தர் சி தெரிவித்துள்ளார்.  இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர்…

2 hours ago

கென்யாவில் நிற்காத மழை! அணை உடைந்து 50 பேர் பலியான சோகம்!!

Kenya : கென்யாவில் கனமழை காரணமாக அணை உடைந்து வெள்ளம் ஏற்பட்டு 50 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர். கென்யாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கனமழை வெளுத்து…

2 hours ago

வெப்பநிலை உயரும்…மழைக்கும் வாய்ப்பு இருக்கு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

Weather Update : தமிழகத்தில் வெப்பநிலை உயரும் எனவும்,  மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு…

2 hours ago

சத்தீஸ்கரில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!

Naxalites: சத்தீஸ்கரில் 7 நக்சலைட்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் நாராயண்பூர் மற்றும் கான்கேர் மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள அபுஜ்மத் என்ற வனப்பகுதியில் பாதுகாப்புப்…

2 hours ago

பாலியல் புகார்… கர்நாடகா எம்.பி பிரஜ்வல் சஸ்பெண்ட்.! மஜத கட்சி அதிரடி நடவடிக்கை…

Prajwal Revanna : பாலியல் புகார் விசாரணை முடியும் வரையில் மஜத எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவின் ஹாசன் தொகுதி எம்.பியாக…

2 hours ago