ஜெயலலிதா வேதா இல்லம் – அவசரமாக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு.!

ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அவசர சட்டம் மூலம் அரசுடைமையாக்குவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டனில் இருக்கும் வேதா இல்ல தொடர்பாக அவசரமாக விசாரிக்க கோரியத்தை சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஜெ.தீபக் தரப்பில் தொடர்ந்த முறையிட்டதை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி அமர்வு மறுத்துவிட்டது.

ஜெயலலிதா நினைவு இல்லம் நாளை திறக்கப்பட உள்ள நிலையில், தீபக்கின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அவசர சட்டம் மூலம் அரசுடைமையாக்குவதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தீபக் வழக்கு தொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்