TN BJP Leader Annamalai - ADMK EX Minister Jayakumar

பெரியார் சிலை விவகாரம்.! அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்.!

By

நேற்று முன்தினம் திருச்சி ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற ‘என் மண் என் மக்கள்’ சுற்றுப்பயணத்தின் போது பேசிய  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தவுடன் கோவில் முன் இருக்கும் கடவுள் மறுப்பாளரின் (பெரியார் சிலை) சிலை அகற்றப்படும் என தெரிவித்தார்.

   
   

மேலும், பாஜக தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழக அரசால் தற்போது செயல்பாட்டில் இருக்கும் இந்து அறநிலைத்துறை நீக்கம் செய்யப்படும் என்றும் தெரிவித்தார். இந்த கருத்துக்கு பலரும் தங்களது விமர்சனங்களை முன்வைத்து இருந்தனர்.

அதிமுகவை விழுங்கும் வேலையை பாஜக செய்து வருகிறது – திருமாவளவன்

இது குறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஒரு தலைவரின் கருத்துக்கள் போற்றப்பட வேண்டும். அதை தவிர்த்து ஒரு தலைவரின் கருத்துக்களை சிதைக்கும் வண்ணம் நடந்து கொள்ளக் கூடாது. இது அவருக்கு பின்னடைவு தான் என்று பேசினார்.

மேலும், அண்ணாமலை கூறியதாக வரும் கருத்துக்கள் தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இன்னொன்று பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் இவை எல்லாம் நடக்கும் என்று அண்ணாமலை கூறியதற்கு, “கடல் வற்றி கருவாடு சாப்பிடலாம் என்று இருந்த கொக்கு குடல் வற்றி செத்துப் போய்விட்டதாம்” என்று கூறிவிட்டு தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையட்டும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று அண்ணாமலை கூறிய கருத்துக்கு தனது விமர்சனத்தை முன்வைத்து இருந்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

Dinasuvadu Media @2023