நான்கு டெலிவரிகளில் 4 விக்கெட் .., சாதித்த ஜேசன் ஹோல்டர்..!

ஜேசன் ஹோல்டர் தொடர்ந்து நான்கு டெலிவரிகளில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாறு சாதனை படைத்தார்.

வெஸ்ட்இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5டி20ஐ மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இது முதலில் டி20 தொடர் நடைபெற்றது. இந்த தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 -2 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. நேற்று கடைசி மற்றும் ஐந்தாவது டி20 போட்டி இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்றது.

இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்தனர். இதையடுத்து 180 ரன்கள் இலக்கு களமிறங்கிய  இங்கிலாந்து அணி ஆட்டம் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடி வந்தது. கடைசி ஓவரில் வெற்றி பெற 20 ரன்கள் தேவை என்ற நிலையில் 2 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில்  இங்கிலாந்து அணி 19.5 ஓவரில் 162 ரன்கள் மட்டுமே எடுத்து 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

அதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டி20ஐ தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆட்டத்தின் இறுதி ஓவரில் ஹோல்டர் கிறிஸ் ஜோர்டான், சாம் பில்லிங்ஸ், அடில் ரஷித் மற்றும் சாகிப் மஹ்மூத் ஆகியோரை ஜேசன் ஹோல்டர் அடுத்தடுத்த விக்கெட் வீழ்த்தி சாதனைப் புத்தகத்தில் தனது பெயரைப் பதிவு செய்தார். டி20 போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த முதல் மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் (ஆண்) என்ற சாதனையை  படைத்தார். மேற்கிந்திய  பெண்கள் அணியில்அனிசா முகமது T20I இல் ஹாட்ரிக் எடுத்த முதல் மேற்கிந்தியராக உள்ளார்.

author avatar
Castro Murugan