#Breaking:அலங்கா நல்லூரில் ஜல்லிக்கட்டு தேதி மாற்றமா? – ஆட்சியர் ஆலோசனை!

ஜனவரி 16 ஆம் தேதி முழு ஊரடங்கு என்பதால்,ஜல்லிக்கட்டு போட்டிகளை மாற்றுவது குறித்து அலங்காநல்லூர் விழாக் கமிட்டியினருடன் இன்று மதியம் மதுரை மாவட்ட ஆட்சியர் ஆலோசனை நடத்தவுள்ளார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடத்த அனுமதி அளித்து தமிழக அரசு முன்னதாக அரசாணையை வெளியிட்டது.மேலும்,ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு அறிவித்திருந்தது.

இதனையடுத்து,மதுரை ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளை,மாடுபிடி வீரர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று மாலை 3 மணிக்கு தொடங்கவுள்ளது எனவும்,அதன்படி,ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் நபர்கள் https://madurai.nic.in/ என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார்.

தமிழகத்தில் ஜனவரி 16 ஆம் தேதி முழு ஊரடங்கு என்பதால்,அலங்கா நல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகளை மாற்றுவது குறித்து இன்று மதியம் மதியம் ஆட்சியர் ஆலோசனை நடத்தவுள்ளார்.அதன்படி,இன்று மதியம் இந்த ஆலோசனை கூட்டத்திற்கு வருமாறு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாக் கமிட்டியினருக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து,ஜனவரி 16 ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்தப்படுமா? அல்லது போட்டிகள் வேறு தேதிக்கு மாற்றப்படுமா? என்பது குறித்து ஆலோசனைக்கு பின்னர் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.