ட்வீட் செய்யவும் இனி காசு தான் ? எலான் மஸ்க் அதிரடி முடிவு !!

Elon Musk : X தளத்தில் இனி போஸ்ட் அல்லது ஏதேனும் போஸ்ட்க்கு ரிப்ளை, கமண்ட், புக்மார்க் போன்றவற்றை செய்வதற்கும் இனி பைசா கட்ட வேண்டும் என்று எலோன் மஸ்க் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

கடந்த 2022-ம் ஆண்டு அன்று எலான் மஸ்க் ட்விட்டர் தளத்தை தனக்கு சொந்தமாக்கி கொண்டார் என்பது நமக்கு தெரியும். அவர் வாங்கியவுடன் பல அதிரடி மாற்றங்களை அதில் கொண்டு வந்தார் என்பதும் நமக்கு தெரிந்ததே. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ட்விட்டரின் பெயரை  மாற்றி அமைத்து X என்று வைத்தார். மேலும், அதன் லோகோவையும் மாற்றி அமைத்து பலவித மாற்றங்களையும் அதில் கொண்டு வந்தார்.

அதே போல தற்போதும் ஒரு அதிரடி முடிவை எலான் மஸ்க் எடுத்துள்ளார்.  அது என்னவென்றால் இனி X தளத்தில் புதியதாக கணக்கு தொடங்கும், அதாவது அக்கௌன்ட் (Account) தொடங்கும் பயணர்களுக்கு ஒரு ட்வீட் செய்வதற்கும், ஒரு டீவீட்டை லைக் செய்வதற்கும், கமெண்ட் செய்வதற்கும், புக்மார்க் செய்வதற்கும் இனிமேல் கட்டணம் கேட்ட வேண்டும் என்பது தான்.

இதற்கு காரணம் என்னவென்றால் தற்போது X தளத்தில் பல ஸ்பேம்கள் (SPAM) மற்றும் தேவை இல்லாத பாட்களின் (BOT) வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கின்றது. இதனால் X தளத்தில் பலரும் பலவித இன்னல்களை சந்தித்து வருவதால் இதை தடுத்து நிறுத்த ஒரு ஆரம்ப நடவைக்கையாக இந்த முடிவை எலான் மஸ்க் எடுத்துள்ளார்.

X தளத்தில் ஏற்கனவே உள்ள பயனர்கள் இலவசமாகப் ஒருவரை பின் தொடரவும், அதில் போஸ்ட்க்கு கமெண்ட் செய்யும் இலவசமாக அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் X-ல் சேர விரும்பும் புதிய பயனர்கள் அனைவருக்கும் வருடாந்திர கட்டணம் விதிக்கப்படும் என்று எலாம் மஸ்க் அறிவித்துள்ளார். இந்த கட்டண மாறுபாடு எப்போது அமலாகும் என்பது அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை.

ஆனால், ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் அமலுக்கு வரும் என்று பயணர்களால் கருதப்படுகிறது. அதனால் வருடாந்தர கட்டணமும் எவ்வளவு இருக்கும் என்றும் தெரியவில்லை. ஆனால், புதிய பயனர்களுக்கு ஆண்டு முழுவதுக்கும் அமெரிக்க டாலர் $1, இந்திய மதிப்பில் சுமார் ரூ.82 வரை வசூலிக்கப்படும் என்று X பயன்ரகளால் கருதப்படுகிறது. ஏற்கனவே X அதன் பிரீமியம் சந்தாவை வெவ்வேறு வகைகளில் தற்போது அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
அகில் R
நான் அகில் R, மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பட்டதாரியான நான் கடந்த 6 மாத காலமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். விளையாட்டு, சினிமா, தொழில்நுட்பம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.